ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத்கோவிந்த் நேற்று வேட்புமனு தாக்கல்ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத்கோவிந்த் நேற்று வேட்புமனு தாக்கல்

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் ராம்நாத்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

வரும் ஜூலை 17 ல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதில், பா.ஜ. சார்பில் ராம்நாத்கோவிந்தும் காங்கிரஸ் சார்பில் மீராகுமாரும் போட்டியிடுகின்றனர்.

தேர்தலில் போட்டியிட ராம்நாத் கோவிந்த் நேற்று தனது வேட்புமனுவை பாராளுமன்ற செயலாளரிடம் தாக்கல் செய்தார். அவரது வேட்புமனுவை பிரதமர் மோடி முதல்வர் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் வழிமொழிந்தனர்.

அவருடன் பிரதமர் மோடி, பா.ஜ. மூத்த தலைவர்கள் அத்வானி, அமித்ஷா, முரளி மனோகர் ஜோஷி, முதல்வர் பழனிசாமி, ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்ட 7 மாநில முதல்வர்கள், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Add Comment