திருச்செந்தூர் கோயில் – செந்தில்நாதன் அரசாங்கம்!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடு எனப் போற்றப்படுகிறது.
அதோடு மற்ற ஆறுபடைவீடுகளோடு ஒப்பிடுகையில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாகவும் அமைந்துள்ளன.
இந்த இடத்தில்தான் முருகப்பெருமான் சூரபத்மன் எனும் அரக்கனை வதம் செய்ததாக சொல்லப்படுகிறது.