ரஷ்யா மீதான அமெரிக்க தடையால் இந்தியாவுக்கு என்ன கவலை? 10 முக்கிய தகவல்கள்

அமெரிக்க அதிபர் டிரம்பின் ரஷ்யா மீதான தடை உத்தரவுகள், அந்நாட்டுடன் எரிசக்தி நல்லுறவைப் பேணி வரும் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று இந்திய வெளியுறவுத் துறை முன்னாள் உயரதிகாரி விஷ்ணு பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி விஷ்ணுபிரகாஷ், பிபிசி தமிழிடம் தெரிவித்த10 முக்கிய அம்சங்கள்:
அமெரிக்க தடை அந்நாட்டின் உள்விவகாரம். ஆனால் அது ரஷ்யாவுடன் தொடர்புடைய இந்தியா போன்ற நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
ரஷ்யாவுடன் இணைந்து எரிவாயு குழாய் திட்டத்தை ஜெர்மனி செயல்படுத்துகிறது.
எனவே, ஐரோப்பிய நாடுகள் ஒரு தீர்வை நோக்கிய முன்னெடுப்பை முயற்சிக்க வேண்டும்.
ரஷ்யா – இந்தியா பாதுகாப்பு ஒத்துழைப்பு வரலாற்றுப்பூர்வமானது. அது தொடர வேண்டும்.
அமெரிக்காவிடம் இதை விளக்கி இந்தியா உரிய பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.
தடை பாதிப்பு குறித்து தூதரக ரீதியாக இரு நாடுகளுடன் இந்தியா பேச்சு நடத்தலாம்.
இரான் மீது முன்பு அமெரிக்க தடை விதித்தபோதும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட்டது.
இந்த விஷயத்தில் தெளிவான, பரஸ்பரம் புரிந்து கொள்ளக் கூடிய அணுகுமுறை தேவை.
ரஷ்யா மீது எரிசக்தி ஒத்துழைப்புக்கு தடை விதித்தால் அதனால் ஆதாயம் அடையப்போவது அமெரிக்காதான்.
தடை நடவடிக்கையால் அமெரிக்க எரிசக்தி மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அதிக பலன் கிடைக்கும்.
பிபிசியின் பிற செய்திகள்:
இரவோடு இரவாக மெரினாவிலிருந்து அகற்றப்பட்ட சிவாஜி சிலை
ஒரே குடும்பத்தில் சிலர் இந்தியர், சிலர் பாகிஸ்தானியர் – இது எப்படி?
டெல்லியில் தமிழக விவசாயிகளின் பசியைப் போக்கும் சீக்கியர்கள்
இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தது எப்படி? (காணொளி)
ரஷ்யா மீது தடைவிதிக்கும் சட்டத்திற்கு டிரம்ப் ஒப்புதல்
ரஷ்யா, வட கொரியா மீதான புதிய தடைகளுக்கு அமெரிக்க செனட் சபை ஆதரவு
அமெரிக்க ராணுவம் அதிகளவு வயாகரா வாங்குவது ஏன்?

Add Comment